“நல்லா டான்ஸ் பண்ற மேன்” - சட்ட அமைச்சரை பாராட்டிய பிரதமர் மோடி

pmmodi Minister Kiren Rijiju
By Petchi Avudaiappan Sep 30, 2021 04:41 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜுவின் நடனத்தை பிரதமர் மோடி பாராட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காஸாலாங் கிராமத்தில் விவேகானந்தா கேந்த்ரா வித்யாலா திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனைப் பார்வையிட சென்ற மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு சென்றார். 

அந்த கிராமத்தில் மிஜி அல்லது சஜோலாங் எனப்படும் பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் ஊருக்கு வரும் விருந்தாளிகளை பாரம்பரிய நடனமாடி வரவேற்பார்கள். அதே பாணியில் தான் அமைச்சர் கிரன் ரிஜிஜூவையும் அவர்கள் வரவேற்றனர்.

அப்போது அமைச்சரும் திடீரென உற்சாகமாகி மக்களுடன் இணைந்து நடனமாடினார்.  கூ எனப்படும் அந்த நடனத்தை கிரன் ரிஜிஜூ தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.அதில் நாட்டுப்புற பாடலும் நடனமும் அருணாச்சலப் பிரதேச மக்களின் உயிர்நாடி என்று பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், "நமது சட்ட அமைச்சர் நன்றாக நடனமாடுகிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் உயிரோட்டம் நிறைந்த கலாச்சாரத்தைக் காண்பதில் மகிழ்ச்சி" என கருத்து தெரிவித்துள்ளார்.