முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

M K Stalin Narendra Modi
By Thahir Oct 10, 2022 06:43 AM GMT
Report

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், நாங்கள் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தபோது முலாயம் சிங் யாதவ் ஜியுடன் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன்.

முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் | Pm Modi Cm M K Stalin Condolence To Mulayam Singh

நெருங்கிய தொடர்பு தொடர்ந்தது, அவருடைய கருத்துக்களைக் கேட்க நான் எப்போதும் ஆவலுடன் இருந்தேன். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார். 

மேலும், முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக, வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார்.

அவரது பாராளுமன்ற தலையீடுகள் தேசிய நலனை மேம்படுத்துவதில் வலியுறுத்தப்பட்டது. முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர். மக்களின் பிரச்னைகளை உணரும் ஒரு தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார்.

மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். லோக்நாயக் ஜேபி, டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பரப்ப தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முலாயம் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் | Pm Modi Cm M K Stalin Condolence To Mulayam Singh

அந்த ட்விட்டர் பதிவில், உபி-ன் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது; மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் முலாயம் சிங். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.’ என தெரிவித்துள்ளார். 

மேலும், முலாயம் சிங் அவர்களின் துக்க நிகழ்வில் தமிழக அரசு சார்பில் டி.ஆர்.பாலு அவர்கள் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.