நெருங்கும் தேர்தல் ரிசல்ட் - இன்று மட்டும் 7 கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி!!
பிரதமர் மோடி இன்று மட்டும் 7 ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
தேர்தல் முடிவுகள்
7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்கலவைக்கான தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஒன்றரை மாதமாக காத்திருக்கும் மக்களுக்கு பெறும் சஸ்பென்ஸ் அன்று உடையவுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சிகளும் பெரிய எதிர்பார்ப்புகளில் இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று மட்டும் 7 ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
7 கூட்டம்
வட இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை, வடக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “ரெமல்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கும் அவர், அதே போல தேர்தல் பிந்திய கருத்துக்கணிப்புகள், வெற்றி பெற்றால் அடுத்த 100 நாட்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் போன்றவற்றை குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் அதிகபட்சத்தில் மீண்டும் பாஜகவின் ஆட்சியே அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தே வருகிறார்கள்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் - ஜூன் 4 செவ்வாய்க்கிழமை