பிரதமர் சேலம் வருகை; பிரச்சார பொதுக்கூட்டம் - கட்சி தலைவர்கள் அணிவகுப்பு!
சேலத்தில் நடைபெறுகின்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வந்ததடைந்தார்.
பிரதமர் சேலம் வருகை
சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்ததடைந்தார்.
பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்த மோடி திறந்தவெளி வாகனத்தில் மேடைக்கு வந்தார். அவரை வரவேற்கும் விதமாக கட்சி நிர்வாகிகள் அவருக்கு வெள்ளி கிண்ணத்தை பரிசளித்துள்ளனர்.
இதில், பங்கேற்கும் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் சிறப்புரையாற்ற உள்ளனர்.
தலைவர்கள் அணிவகுப்பு
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 2,500-கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவரது பாதுகாப்பு கருதி டிரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், குஷ்பு, சரத்குமார்,ஜி.கே.வாசன், பாவேந்தர், ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.