ஈஸ்டர் பண்டிகை : கிறிஸ்துவ மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து

Easter2022 ModiEasterwish PresidentEasterwish resurrection
By Swetha Subash Apr 17, 2022 07:50 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி தங்களது வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பம், மன்னிப்பு, தியாகம் மற்றும் அன்பின் பாதையைப் பின்பற்ற ஈஸ்டர் நம்மைத் தூண்டுகிறது.

கிறிஸ்துவின் போதனைகள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ஊக்குவிக்கப்பட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ஈஸ்டர் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் மற்றும் சமூக நீதி மற்றும இரக்கத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவு கூர்கிறோம். மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவத்தின் ஆவி நம் சமூகத்தில் மேலும் வளரட்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.