படங்கள் குறித்த சர்ச்சை கருத்துகள் வேண்டாம் : பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவு ?
திரைப்படங்கள் குறித்து பாஜகவினர் பேச வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல் வெளியானது.
பதான் திரைப்பட சர்ச்சை
ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்த இந்த படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது , குறிப்பாக பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடை அணிந்திருந்துருப்பதாக இந்து மத ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அதை தொடர்ந்து பதான் படத்தை திரையிடக்கூடாது என பாஜகவினர் இந்த்துவவாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மோடி உத்தரவு
இந்த நிலையில் பாஜக தலைவர்கள் திரைப்படங்கள் குறித்த கருத்துகளை பேச வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திரைப்பட சர்ச்சைகள் குறித்து பாஜக தலைவர்கள் பேசுவதால் அரசின் திட்டங்கள் மக்களிடையே சென்றடையாமல் இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு 400 நாட்களே உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களின் உழைப்பை வீணடிக்கும் வகையில் இந்த வீண் விவாதம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.