அந்த நேரத்தில் மட்டும் நான் பிரதமரா இருந்திருந்தால்.. முக்கிய பிரச்சனை குறித்து பிரதமர் மோடி!
வங்கதேச போர் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி
பஞ்சாப், பாட்டியாலாவில் தனது முதல் பேரணியில் பிரதமர் உரையாற்றினார். அதில், பஞ்சாப் மற்றும் சீக்கிய சமூகம் தேசியக் கட்டுமான முயற்சிகளில் எப்போதும் முன்னணியில் இருக்கிறது.
குருநானக் தேவ் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை கழித்த சீக்கியர்களின் புனித இடமான கர்தார்பூர் குருத்வாராவை 70 ஆண்டுகளாக தொலைநோக்கியில் மட்டுமே தரிசனம் செய்ய முடிகிறது.
வங்கதேச போர்
1971-இல் வங்க போரின்போது 90,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவத்தின் முன் சரணடைந்தபோது கர்தார்பூர் குருத்வாராவை திரும்பப் பெற ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது தாம் பிரதமராக இருந்திருந்தால், கர்தார்பூர் குருத்வாராவை அவர்களிடமிருந்து பறித்து பின்னர் அவர்களது படைகளை விடுவித்திருப்பேன். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் காகித முதல்வர். டெல்லி தர்பாரில் தனது இருப்பைக் குறிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
பஞ்சாப்பில் மணல் கடத்தல், போதைப்பொருள் மாஃபியா மற்றும் துப்பாக்கி கும்பல் ஆட்சி செய்யும்போது அரசாங்கத்தின் ஆணை இங்கு இயங்காது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.