முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக தேர்வாகியுள்ள முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இதில் தொடக்கம் முதல் கடும் போட்டி நிலவிய திமுக மற்றும் அதிமுக இடையேயான போட்டியில் திமுக கட்சி வெற்றிப்பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக தேர்வாகியுள்ளார்.
இவரது வெற்றிக்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி, திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல அவர் மம்தா பானர்ஜிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.