‘‘பின்லேடனை வாய்தவறி தியாகி என கூறிவிட்டார் இம்ரான்" - விளக்கம் கொடுத்த பாக்.அமைச்சர் !

Imran Khan Osama bin Laden tongueslip
By Irumporai Jun 27, 2021 02:55 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஒசாமா பின்லேடனை  இம்ரான்கான்  வாய் தவறி தியாகி என கூறிவிட்டதாக   அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய, பிரதமர் இம்ரான் கான் ஒசாமா பின்லேடனை தியாகி என பேசினார்.

மேலும்,ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர். அவர் ஒரு தியாகி. அமெரிக்கா நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் கூட சொல்லாமல் ஒருவரைக் கொன்றது பெரிய அவமானம்." என்று பேசினார்

இம்ரான்கானின் இந்த பேச்சு உலக அரசியலில் பாகிஸ்தானுக்கு   உலகம் அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இம்ரான் கான் பேசியது அது வாய் தவறி சொன்னது என அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் தற்போது விளக்கமளித்துள்ளார்

 பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு மத்திய அமைச்சர் பாவத் சவுத்ரி, வாய்தவறி பின்லேடனை தியாகி என இம்ரான் கூறிவிட்டதாக கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்து ஐ.நா.,வில் பாகிஸ்தான் வாக்களித்ததையும் சுட்டிக்காட்டினார்.