என்னது பிஎம் கேர்ஸ் நிதி அரசு நிதியில்லையா? வெளியான அதிர்ச்சி தகவல்

Delhi High Court PM CARE public authority RTI Act
By Irumporai Sep 23, 2021 12:33 PM GMT
Report

பிஎம் கேர்ஸ் நிதியானது அரசு நிதி அல்ல என்றும், இதன் மூலம் வரும் நிதி இந்தியாவின் நிதித் தொகுப்பைச் சென்றடையாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிஎம் கேர்ஸ் நிதியப் பணிகளைக் கவனித்துக் கொள்ளும் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலர் தெரிவித்துள்ளார்.

இந்தியா கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பிஎம் கேர்ஸ் நிதித் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு தொடங்கினார், இதன் வெளிப்படைத் தன்மை குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலரும் நிதியின் பணிகளை ஊதியமின்றிக் கவனித்துக் கொள்பவருமான பிரதீப் குமார் ஸ்ரீவாஸ்தவா பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

என்னது பிஎம் கேர்ஸ் நிதி அரசு நிதியில்லையா? வெளியான அதிர்ச்சி தகவல் | Pm Cares Is Nota Public Delhi High Court

அதில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காகத் தணிக்கை செய்யப்படும் அறிக்கை அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பதிவிடப்படுகிறது.

அறக்கட்டளைக்கு வரும் தொகை எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த விவரங்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன. அறக்கட்டளைக்கு வந்த பணம் அனைத்தும் இணைய வழியாகவும் காசோலையாகவும் அல்லது டிடியாகவும்தான் பெறப்பட்டுள்ளன.

பெறப்பட்ட தொகை அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. செலவினங்களும் இணையப் பக்கத்தில் வெளியிடப்படுகிறது. இந்த நிதி அரசு நிதி அல்ல. இதில் சேரும் நிதி எதுவும் இந்திய நிதித் தொகுப்பைச் சேராது.

மற்ற அறக்கட்டளைகளைப் போல பொது நலனுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதற்கான கொள்கைகளுடனே பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையும் இயங்கி வருவதாக 

அரசியலமைப்பின் கீழ் வராத அறக்கட்டளை இது மத்திய அரசின் ஊழியராக இருந்தபோதிலும், ஊதியம் எதுவுமின்றி பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைப் பணிகளை மேற்கொள்ள நான் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் வாஸ்தவா.