உ.பி யில் இருந்து இத்தனை பிரதமர்களா.. யோகி ஆதித்யநாத் ?
உத்திரப் பிரதேசம் கொடுத்த பிரதமர்களின் வரிசையில் யோகி ஆதித்யநாத் வருவாரா?
உத்திரப் பிரதேசமானது எண்ணிக்கை அளவில் அதிகமான இந்தியப் பிரதமர்களை வழங்கியுள்ள மாநிலமாகும்.
முதல் பிரதம மந்திரியான ஜவாஹர்லால் நேரு. இரண்டாவது பிரதமராக காமராஜரால் அடையாளப்படுத்தப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி , நாட்டின் முதலாவது பெண் பிரதமரான இந்திராகாந்தி.
பாகபத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரண் சிங், நேரு குடும்பத்தின் ராஜீவ் காந்தி, 7-வது பிரதமராக ஓராண்டு மட்டும் இருந்த வி.பி.சிங்.
குறைந்த காலமே பதவி வகித்த 8வது பிரதமர் சந்திரசேகர் உத்தரப் பிரதேசத்தின் லக்னெள தொகுதியில் 1998-ல் வெற்றி பெற்ற வாஜ்பாய்,
மேலும் தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி கூட வாராணசி தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு பிரதமரானார்.
அந்த வகையில் தற்போது உத்திரப்பிரதேசத்தில் பாஜக வின் முகமாக இந்தியா முழுவதும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத் நரேந்திர மோடிக்கு அடுத்த பிரதமராக வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.