பிரதமர் வேட்பாளர் விஜயா? தொல்.திருமாவளவன் பதில்

Thol. Thirumavalavan
By Fathima Sep 06, 2026 04:37 AM GMT
Report

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.

கூட்டத்தில் யார் யார் பங்கேற்பார்கள், என்ன செய்ய போகிறார்கள் என்பது குறித்து நடைபெறும் போது தான் தெரியவரும் என தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளர் விஜயா? தொல்.திருமாவளவன் பதில் | Pm Candidate Tvk Ministers Thirumavalavan

மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவின்படி ஆணவக்கொலை தடுப்பு மசோதா வரையறுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது தமிழக வெற்றி கழகத்தின் பிரதமர் வேட்பாளர் விஜய்-யா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது. தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னணி தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசவில்லை, ஆனால் மற்றவர்கள் கூறிவருகின்றனர், அதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என கூற முடியாது என தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம், 2029 தேர்தல் வரட்டும், அப்போது கூறுகிறேன் என தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளர் விஜயா? தொல்.திருமாவளவன் பதில் | Pm Candidate Tvk Ministers Thirumavalavan