இங்கிலாந்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: பரபரப்பு சம்பவம்
இங்கிலாந்தின் Plymouth நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிசூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Plymouth நகரில் உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 6.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலரும் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் அச்சப்படாமல் போலீசார் ஆலோசனைப்படி அவசரப்பிரிவினர் தங்களது வேலைகளை செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபரும் உயிரிழந்துள்ள நிலையில், இது தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.