பொது தேர்வை புறக்கணிக்கும்மாணவர்கள் : கேள்விக்குறியாகும் எதிர்காலம்

By Irumporai Mar 22, 2023 10:12 AM GMT
Report

தமிழகத்தில் பொது தேர்வை புறக்கணிக்கும் பிளஸ் 2 மாணவர்களால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகின்றது. தற்போது நடைபெற்று வரும் பொது தேர்வில் மிகவும் குறைவான மாணவர்களே தேர்வு எழுதாது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொது தேர்வை புறக்கணிக்கும்மாணவர்கள் : கேள்விக்குறியாகும் எதிர்காலம் | Plus 2 Students Who Ignore Public Examination

கேள்விக்குறியாகும் எதிர்காலம்

மார்ச் 13 ம் தேதி முதல் பள்ளிகலில் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது வரை தமிழ் , ஆங்கில பாடத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. இதை தொடர்ந்து இயற்பியல், பொருளியல் ,கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது.

இந்த நிலையில் 47 ஆயிரம் மாணவர்கள் நேற்று நடந்த பிளஸ் 2 தேர்வை எழுதவில்லை என்பது தெரிய வந்துள்ளது, ஏற்கனவே நடந்த மொழிப்பாட தேர்வையும் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.