நிற்காமல் சென்ற அரசு பேருந்து ..பின்னால் ஓடிய +2 மாணவி - அதிர்ச்சி வீடியோ!
அரசு பேருந்து பின்னால் பிளஸ்-2 மாணவி ஒருவர் ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு பேருந்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை ஆலங்காயம் நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்து கொத்த கோட்டை கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதக் காத்திருந்த மாணவி பேருந்தின் முன் கைகாட்டி நிறுத்தினார்.
ஆனால், பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பேருந்தை விட்டுவிட்டால் தேர்வு எழுதச் செல்ல முடியாதே என்ற அச்சத்தில் ஓட்டுநர் நிறுத்தினார்.
அதன்பிறகு மாணவி பேருந்தில் ஏறிச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து ஓட்டுநர் முனி ராஜை இடைநீக்கம் செய்து அரசுப் போக்குவரத்துக் கழகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.