பிளஸ் 2 பொது தேர்வு குறித்து நாளை கருத்து கேட்பு..

corona exam tamilnadu
By Irumporai Jun 02, 2021 12:47 PM GMT
Report

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக நாளை கருத்து கேட்பு என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக்கு பிறகு  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் +2 தேர்வு குறித்த முடிவுகளை பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக நாளை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும்.

பள்ளி தலைமையாசிரியர் மூலமாக  மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்துகளை கேட்க  கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை கருத்துக்களை கேட்ட பின்பு  அறிக்கை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.