தீவிர சிகிச்சை பிரிவில் மகள் - எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் நடிகை ரம்பா வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழில் அதிபரான பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார்.
ரம்பா சென்ற கார் விபத்து
இவர்கள் தற்போது கன்னடாவில் தங்களின் 3 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நடிகை ரம்பா மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதில் அவருடைய இளைய மகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இளையமகள்
தன்னுடைய மகள் குணமடைய வேண்டி ரம்பா ஒர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், என் சிறிய மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார்.
மேசமான நாட்கள், மோசமான நேரம் தயவு செய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் பிரார்த்தனை நிறைய அர்த்தம் என அவர் தனது ரசிகர்ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரணிலின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்! அரகலயவின் பின்னணியில் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து 6 பேர் விடுதலை IBC Tamil