டி20 உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள்: அதிக சிக்ஸ் விளாசிய அணி எது தெரியுமா?

Sri Lanka Cricket West Indies cricket team Indian Cricket Team T20 World Cup 2026
By Sivaraj Feb 03, 2026 12:30 PM GMT
Report

தற்போது டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள டாப் 9 அணிகள் எவ்வளவு சிக்ஸ் அடித்துள்ளன என்பது குறித்து பார்ப்போம். 

டி20 உலகக்கோப்பை தொடர் 

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் 7ஆம் தேதி தொடங்குகிறது. 

Suryakumar Yadav

கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடாத வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தமுறை டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்று விளையாட உள்ளது.

பந்துகளுக்கு ஒரு சிக்ஸ் அடித்த அணிகளின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னணியில் உள்ளது. 

Nicholas Pooran

இந்தியா முதலிடம்

ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி அதிக சிக்ஸ் (1198) அடித்திருந்தாலும், பந்துகள் அடிப்படையில் (12.18) இப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 

Mitchell Marsh

இந்திய அணி 10.99 பந்துகள் இடைவெளியில் 1081 சிக்ஸ் விளாசி முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 11.72 பந்துகள் இடைவெளியில் 872 சிக்ஸ் விளாசி இரண்டாவது இடத்தில் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸை அடுத்து தென் ஆப்பிரிக்கா (915 சிக்ஸ்/13.54 பந்துகள்), நியூசிலாந்து (770 சிக்ஸ்/14.39 பந்துகள்) அணிகள், இங்கிலாந்து (909 சிக்ஸ்/14.81 பந்துகள்) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன.

7, 8 மற்றும் 9வது இடங்களில் ஆப்கானிஸ்தான் (781 சிக்ஸ்/15.38 பந்துகள்), பாகிஸ்தான் 771 சிக்ஸ்/16.50 பந்துகள்) மற்றும் இலங்கை (482 சிக்ஸ்/17.78 பந்துகள்) ஆகிய அணிகள் உள்ளன.  

Kamindu Mendis

Marco Jansen