மது அருந்திவிட்டு மாடு பிடிக்க வந்த வீரர் தகுதி நீக்கம் - 4 பேர் காயம்

Thai Pongal Madurai Jallikattu
By Thahir Jan 15, 2023 06:31 AM GMT
Report

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயர்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, எம்.பி வெங்கடேசன் ஆகியோர் போட்டிகளைத் தொடங்கிவைத்தனர். இதில் வாடிவாசல் தாண்டி காளைகள் சீறிப்பாயத் தொடங்கியுள்ளன.

முதலில் கோயில் காளைகளும், அதன்பின்பு வளர்ப்புகாளைகளும் சீறிப்பாய்ந்து வருகின்றன. ஆயிரத்திற்கும் அதிகமான காளைகள் பங்கேற்கும் இந்தப் போட்டியைக் காண தமிழகம் மட்டுமல்லாது, வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர்.

வீரர் தகுதி நீக்கம் 

வாடிவாசல் தாண்டி வந்த காளைகளை பிடிக்க முயன்றபோது மாடு குத்தியும், மோதியும் இதுவரை 4 பேர் படுகாயங்களும், 4 பேர் லேசான காயங்களும் அடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மது அருந்திவிட்டு மாடு பிடிக்க வந்த வீரர் தகுதி நீக்கம் - 4 பேர் காயம் | Player Who Came To Catch The Cow Is Disqualified

மற்றவர்களுக்கு அங்கேயே இருக்கும் மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாடு பிடி வீரர்கள் களத்தில் இறங்கும் முன்பு காய்ச்சல் சோதனை, உடல் தகுதி சோதனை ஆகியவை செய்யப்பட்டன. இதில் மது அருந்திவிட்டு வந்த வீரர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.