பிரபல பின்னணி பாடகி கல்யாணி திடீர் மறைவு - இன்று இறுதிசடங்கு!! திரையுலகினர் இரங்கல்!
மறைந்த பிரபல பின்னணி பாடகி கல்யானி மேனனின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல பாடகியாக இருந்தவர் கல்யாணி மேனன். 1979ஆம் ஆண்டில் திரையுலகின் பாடகியாக அறிமுகமானார்.
நல்லதொரு குடும்பம் திரைப்படத்தில் செவ்வானமே பொன் மேகமே என்ற பாடல்தான் இவரது முதல் பாடலாகும். தொடர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் பாடிய `வாடி சாத்துக்குடி’என்ற பாடல் பொதுமக்கள் மத்தியில் ஹிட் ஆனது.

மேலும் முத்து திரைப்படத்தில் குலுவாலிலே பாடல், அலைபாயுதே திரைப்படத்தில் அலைபாயுதே பாடல், விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தில் ஓமணப்பெண்ணே பாடல், ஆகிய பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி ஹிட் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக உடலில் பிரச்சனை ஏற்பட்டு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இவரது இறுதிசடங்கு
இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது.