டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு - ஜெயிக்குமா டெல்லி?

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பிளே-ஆஃப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், பவுலிங் தேர்வு செய்துள்ளார். இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் விளையாடி உள்ளன.

அதில் டெல்லி 12 போட்டிகளிலும், கொல்கத்தா 15 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. நடப்பு சீசனின் இரண்டாவது பாதி மோதலில் டெல்லியை, கொல்கத்தா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

அதே போல கொல்கத்தா அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மாறாக டெல்லி அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் கொல்கத்தா விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் வெள்ளியன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதி போட்டியில் விளையாடும்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்