ரூ.10 லிருந்து 50 ஆக உயர்ந்த ப்ளாட்பார்ம் டிக்கட் கட்டனம்.. அதிர்ச்சியில் மக்கள்
people
shock
platform
ticket
By Jon
ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ. 10 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நிலையங்களான எழும்பூர், தாம்பரம் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. பொது மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவே தற்காலிகமாக இந்த விலையேற்றம் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா முடக்கத்தால் பெரும்பாலான இரயில் நிலையங்களில் பயணிகளைத் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.