கோவை யானையின் வயிற்றில் தோண்ட, தோண்ட பிளாஸ்டிக் - குட்டியுடன் உயிரிழந்த துயரம்
யானையின் வயிற்றில் கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வயிற்றில் பிளாஸ்டிக்
கோவை மருதமலை அடிவாரத்தில் பெண் காட்டு யானை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தது. தொடர்ந்து வனத்துறையினர் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குட்டி யானை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. முதல் முறையாக பாதிக்கப்பட்ட யானைக்கு நேற்று ஹைட்ரோ தெரபி மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி 5 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட யானைக்கு காது நரம்பு மூலம் மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் அளிக்கப்பட்டது.
யானை உயிரிழப்பு
வனப் பகுதியில் தற்காலிக குட்டை அமைக்கப்பட்டு அதில் 18 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. பின்னர், பொக்லைன் மூலமாக யானையை தண்ணீருக்குள் இறக்கி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த பெண் யானைக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், யானையின் வயிற்றில் 15 மாதங்கள் நிரம்பிய நன்கு வளர்ச்சியடைந்த ஆண் யானை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள் யானையின் வயிற்றில் இருந்துள்ளது. இச்சம்பவம் வன மற்றும் விலங்குகள் ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
