பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்ய முடியாது : தமிழ்நாடு அரசு மனு தாக்கல்
பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் தடை
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான் தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பிளாஸ்டிற்கு மாற்றாக வேறு பொருட்கள் இல்லாததால் தடையை முழு அளவில் அமல்படுத்த இயலாது.

மனு தாக்கல்
பால், எண்ணெய் உள்ளிட்ட உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் தடை ஆணையை மாற்ற வேண்டியது அவசியம். 2020-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை முழுமையாக அமல்படுத்த சாத்தியமில்லாததால் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை செயலாளர் உள்ளிட்டோர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதித்தால் உள்ளூர் தொழில்கள், வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது. பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் தடைஉத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகள் ஜூன் 5க்கு ஒத்திவைக்கப்பட்டது.