குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா..போராடிய மருத்துவர்கள் - அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Madurai
By Swetha Oct 03, 2024 03:17 AM GMT
Report

குழந்தையின் தொண்டையில் பிளாஸ்டிக் டப்பா சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் டப்பா..

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஹசீனாபானு. இவருக்கு இரண்டரை வயதில் ஆலியா என்ற பெண் குழந்தை உள்ளது. ஹசீனாபானு வேலைக்கு சென்றதால் குழந்தையை தனது தாயிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா..போராடிய மருத்துவர்கள் - அதிர்ச்சி சம்பவம்! | Plastic Dappa Got Stuck In 2 Yrs Childs Throat

வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஆலியா கீழே கிடந்த சிறிய பிளாஸ்டிக் தைல டப்பாவை எடுத்து வாயில் வைத்துள்ளது. அப்போது குழந்தை அதை விழுங்க தொண்டையில் சிக்கிக்கொண்டது.

தொண்டையில் சிக்கிய பரோட்டா - இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

தொண்டையில் சிக்கிய பரோட்டா - இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

மருத்துவர்கள் 

இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு இருந்த டாக்டர் சிவகரன் மற்றும் செவிலியர்கள்,

குழந்தையின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பா..போராடிய மருத்துவர்கள் - அதிர்ச்சி சம்பவம்! | Plastic Dappa Got Stuck In 2 Yrs Childs Throat

குழந்தை ஆலியாவின் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை 15 நிமிடம் போராடி வெளியே எடுத்து உயிரை காப்பாற்றினர். அதன்பிறகு, மருத்துவமனை டாக்டர் மற்றும் செவிலியர்களுக்கு குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.