டயர் பஞ்சராகி நின்ற விமானம் - கைகளால் தள்ளிய ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ
சாலையில் பழுதாகி நிற்கும் கார், லாரி, பஸ் போன்ற வாகனத்தை கைகளால் தள்ளியதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால், ஓடு தளத்தில் டயர் பஞ்சராகி நின்ற பயணிகள் விமானத்தை கைகளால் தள்ளிய சம்பவம் நேபாளம் நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.
நேபாளம், காத்மாண்ட் நகரை தலைமையிட கொண்ட யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், பஜூரா மாவட்டத்தில் உள்ள கோல்டி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அப்போது, விமானத்தின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால், விமானம் பஞ்சாராகி ஓடுதளத்தில் நடுவில் நின்று விட்டது. விமானத்தை நகர்த்த முடியாததால், அதே ஓடுதளத்தில் மற்றொரு விமானம் தரையிறங்க முயன்றது.
ஆனால் அந்த விமானம் தரையிறங்க முடியவில்லை. உடனே, விமானத்தில் பயணித்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளிச் சென்றார்கள்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
