வீடு மீது விழுந்து நொருங்கிய விமானம் - 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வீட்டின் மீது சிறிய ரக வாகனம் ஒன்று விழுந்து நொருங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீடு மீது விழுந்து நொருங்கிய விமானம்
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் செஸ்னா 172 சிறிய ரக விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் தரை இறங்க முயன்ற பொழுது, தகவல் துண்டிப்பு இழந்து துலுத் விமான நிறையத்திற்கு அருகே ஹெர்மன்டவுனில் உள்ள வீட்டின் மீது விழுந்து நொருங்கியது.

இந்த விபத்தில் விமானத்தின் பைலட்டாக இருந்தவர் ஃப்ரீட்லேண்ட் (32), செயின்ட் பால் நகரைச் சேர்ந்த அலிசா ஷ்மிட் (32) மற்றும் அவரது சகோதரர் மேத்யூ ஷ்மிட் (31) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் வீட்டில் துாங்கி கொண்டிருந்த 2 பேரும் காயமின்றி தப்பினர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.