Thursday, Jul 3, 2025

விமான விபத்து நடக்கும் என்று முன்பே கணித்த பெண் - பிற கணிப்புகள் என்ன சொல்கிறது?

Gujarat Astrology Flight Death
By Sumathi 19 days ago
Report

ஒரு வாரத்திற்கு முன்பே பெண் ஜோதிடர் ஒருவர் விமான விபத்தை கணித்துள்ளார்.

விமான விபத்து

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

astrologer sharmistha

விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த விமான விபத்து குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே ஜோதிடர் ஷர்மிஸ்தா என்பவர் துல்லியமாக கணித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதில், ''2025 ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்படும்.

விமான விபத்து: வைரலாகும் பணிப்பெண்களின் ரீல்ஸ் வீடியோ

விமான விபத்து: வைரலாகும் பணிப்பெண்களின் ரீல்ஸ் வீடியோ

ஜோதிடர் கணிப்பு

மேலும், விமான விபத்து தொடர்பான தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும். இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்தேன். விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே சிறிது முன்னேற்றம் தொடங்கிவிட்டது.

விமான விபத்து நடக்கும் என்று முன்பே கணித்த பெண் - பிற கணிப்புகள் என்ன சொல்கிறது? | Plane Crash Astrologer Sharmistha Prediction Viral

குரு மிதுன ராசியில் மிருகசீரிஷம் மற்றும் ஆர்த்ராவின் மிதுனப் பகுதியில் மாதத்திற்கு சுமார் 6.5 டிகிரி வேகத்தில் இருக்கும்போது, விமானப் போக்குவரத்து செழிக்கும், ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்'' என்று குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து டாடா நிறுவனம் ஹைதராபாத்தில் ரஃபேல் விமானத்தின் உடற்பகுதியை உருவாக்கும்.

இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல், விண்வெளி சுற்றுலா ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளில் உலகையே ஆச்சரியப்படுத்தும். கெஜ்ரிவாலைப் போல ஈரான் 2027 க்குப் பிறகு மீண்டும் பலம் பெறத் தொடங்குவார்கள். பல இஸ்லாமிய நாடுகள் ஈரானை கூட்டாக ஆதரிக்கத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.