சீனாவில் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம் - 133 பயணிகள் பலி?
சீனாவில் மலையில் மோதி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் எ சைனா ஈஸ்டர்ன் பயணிகள் போயிங் 737 விமானம் மதியம் 1 மணிக்கு குன்மிங் நகரிலிருந்து புறப்பட்ட நிலையில் குவாங்சி மாகாணத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் 133 பயணிகள் பயணித்ததாகத் கூறப்படும் நிலையில் மலையில் மோதியதில் அப்பகுதி தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்சி மாகாணத்தின் தீயணைப்பு துறையினர், விபத்தால் எரிந்த மலைப்பகுதியில் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் விபத்து குறித்து மதியம் 2.30 மணியளவில் தான் உள்ளூர் மக்களிடம் இருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த விபத்துக்கு பிறகான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 133 பயணிகள் நிலை குறித்து சீன அரசு கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
? Boeing 737 passenger jet carrying 133 people crashes into mountains in rural China
— Daily Mail Online (@MailOnline) March 21, 2022
+ Plume of smoke is seen billowing from the wreckage
READ MORE: https://t.co/tECXl4TGaW pic.twitter.com/q11LZlnHRG