கொரோனாவை கட்டுபடுத்த 5 முனை திட்டம் : மத்திய அரசு நடவடிக்கை
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஐந்து முக்கிய திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ள நிலையில்12 மாநிலங்களுடன் உயர்மட்ட கூட்டத்தை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நடத்தினார். இந்த கூட்டத்தில், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பங்கேற்றன.
இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஐந்து முனை திட்டம் வகுக்கபட்டது
அந்த ஐந்து முனை திட்டங்கள்
பரிசோதனைகளை அதிகளவில் நடத்துதல்
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அவர்கள் தொடர்புகளை கண்டறிதல்
பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல்
கொரோனா நடத்தை விதிமுறையை உறுதி செய்தல்
கொரோனா அதிகமாக பரவும் மாவட்டங்களை கண்டறிந்து தடுப்பு மருந்து வழங்குதல்
இதனை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.