திமுக-வில் பெண்களுக்கு எத்தனை இடம் தெரியுமா?

Parliament women dmk
By Jon Mar 12, 2021 03:47 PM GMT
Report

சட்டப்பேரவைத் தேர்தலை திமுக சார்பில் போட்டியிடப்படும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 12 பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த வேட்பாளர்கள் பட்டியலில் 7 சதவீத அளவிற்கே பெண்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியல் பெரும்பாலும் வெளியாகிவிட்ட நிலையில் தலைமை தாங்கும் திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் 12 பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் வேட்பாளர்களுக்கு என்னென்ன தொகுதிகள்

மதுரை மேற்கு- சின்னம்மாள்

ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா

தூத்துக்குடி- கீதா ஜீவன்

மானாமதுரை (தனி) - தமிழரசி

தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்

மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

கிருஷ்ணராயபுரம் (தனி)- சிவகாமசுந்தரி

ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்

கெங்கவல்லி (தனி)- ரேகா பிரியதர்ஷினி

திண்டிவனம் (தனி) - சீத்தாபதி சொக்கலிங்கம்

செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதன்

குடியாத்தம் - அமலு

இது திமுக களம் காணும் மொத்த வேட்பாளர்கள் (173 பேர்) பட்டியலில் 7% சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.