தமிழகத்தில் 9 இடங்களில் சதம் விளாசியது சுட்டெரிக்கும் வெயில்
தமிழகத்தில் 9 இடத்தில 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க,தன் பங்கிற்கு வெயிலும் மக்களை ஒரு காட்டு காட்டி வருகிறது. இந்தாண்டும் இல்லாத அளவில் தற்போது வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
அதன் விளைவாக தமிழகத்தின் 9 இடங்களில், வியாழக்கிழமை வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. இதில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
அடுத்தபடியாக மதுரைவிமான நிலையம், ஈரோடு, கரூா் பரமத்தி, பாளையங்கோட்டை, சேலம், திருப்பத்தூா், திருச்சி ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி பாரன்ஹீட், தருமபுரியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.