ஐ.பி.எல். முன்னாள் தலைவருக்கு கொரோனா பாதிப்பு : ஆபத்தான நிலையில் உடல்நிலை

TATA IPL
By Irumporai Jan 14, 2023 04:56 AM GMT
Report

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியவர் லலித் மோடி. அதன் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்தவர். இவர் மீது ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு உள்ள நிலையில்,இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்படும் பட்டியலில் உள்ளார்.

கொரோனா

தற்போது லலித் மோடி லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது,லலித் மோடி கடந்த ஆண்டு ஜூலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 10 வருட வயது வித்தியாசம் உள்ள நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன் என கூறியிருந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஐ.பி.எல். முன்னாள் தலைவருக்கு கொரோனா பாதிப்பு : ஆபத்தான நிலையில் உடல்நிலை | Pl Former President Lalit Modi Infected Corona

சிகிச்சையில் லலித் மோடி  

இந்த நிலையில் இந்த நிலையில், லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் 24 மணிநேரமும் பிராணவாயு சிகிச்சை எடுத்து கொள்கிறேன் என்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2 வாரங்களில் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது என்றும் ஆழ்ந்த நிம்மோனியா பாதிப்பும் காணப்படுகிறது என அவர் தெரிவித்து உள்ளார்.

ஐ.பி.எல். முன்னாள் தலைவருக்கு கொரோனா பாதிப்பு : ஆபத்தான நிலையில் உடல்நிலை | Pl Former President Lalit Modi Infected Corona

3 வாரங்களில் அவர் மெக்சிகோ நாட்டிலும், பின்னர் இங்கிலாந்தின் லண்டன் நகரிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்காக 2 மருத்துவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்து கொண்டார். அவர்கள் உதவியுடன், தனது மகனின் ஆதரவுடன் லண்டனுக்கு விமானம் வழியே கொண்டு செல்லப்பட்டுள்ளார்.