பிச்சைக்காரரின் வாழ்க்கையை மாற்றிய 5 வினாடி - PK படத்தால் வீடு, காதலி என செட்டில்!
பி.கே என்ற இந்தி திரைப்படம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
மனோஜ் ராய்
இயக்குநர் ராஜ் குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு பி.கே என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் பெரும் வெற்றி பெற்று அன்றைய சூழலில் சுமார் ரூ.800 கோடி வசூலித்தது.
மேலும், இந்த படம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவரின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளது. இந்த படத்தின் ஒரு காட்சியில் மனோஜ் ராய் என்பவர் பிச்சைக்காரராக 5 வினாடிகள் இடம்பெற்றிருந்தார்.
உண்மையிலேயே பிச்சைக்காரரான இவர், நிஜ வாழ்க்கையில் தனக்கு கண் தெரியாது என்று நடித்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு படக்குழுவினர் ரூ. 20 கொடுத்து ஆடிஷனுக்கு வர வைத்துள்ளனர்.
வாழ்க்கை மாற்றம்
அங்கு வந்த 7 பிச்சைக்காரர்களில் மனோஜ் ராய் தேர்வு செய்யப்பட்டார். அந்த படத்தில் அமீர்கானுடன் அவர் தோன்றும் 5 வினாடி காட்சிக்காக சுமார் ரூ.10,000 வரையில் பணம் ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணத்துடன் தனது கிராமத்துக்கு சென்ற மனோஜ் ராய், அங்கு கடை ஒன்றை வைத்து, பின்னர் படிப்படியா முன்னேறியுள்ளார். தற்போது அவர் வீடு, வசதி, காதலி என வாழ்க்கையில் உயர்ந்துள்ளார்.
இதுகுறித்து மனோஜ் ராய் கூறுகையில் "5 வினாடி காட்சி தனது வாழ்க்கையை மாற்றியதைப் போல, யாருக்கு எப்போது உயர்வு வரும் என்று சொல்ல முடியாது. எனவே நம்பிக்கையோடு வாழ்க்கையை அணுகுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.