NDA கூட்டணியில் விஜய்யா? பியூஷ் கோயல் பேட்டி

BJP
By Fathima Feb 01, 2026 04:47 AM GMT
Report

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்காக தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்ற தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.    

இந்நிலையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் பிடிஐ-க்கு அளித்துள்ள பேட்டியில், ஆளும் திமுக அரசு மற்றும் தவெக குறித்து விமர்சித்துள்ளார்.

210 தொகுதிகளில் வெற்றி.. பெரும்பான்மையுடன் ஆட்சி! எடப்பாடி பழனிசாமி

210 தொகுதிகளில் வெற்றி.. பெரும்பான்மையுடன் ஆட்சி! எடப்பாடி பழனிசாமி


அவர் கூறுகையில், விஜய் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார், ரசிகர்கள் பட்டாளம் வாக்காக மாறாது, திமுக-வின் வாக்குகளை சிறிய அளவில் பிரிக்கலாம், விஜய்யை என்டிஏ-வுக்கு கொண்டு வரும் எண்ணமில்லை, அதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் திமுக-வுக்கு எதிரான மனநிலையே இருக்கிறது, ஊழல் நிறைந்த அரசு, தமிழ் கலாசாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது தமிழ் கலாசாரம் குறித்து உதயநிதி ஒருபோதும் பேசியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

NDA கூட்டணியில் விஜய்யா? பியூஷ் கோயல் பேட்டி | Piyush Goyal Criticized Kamal And Vijay