விஜயகாந்த் குறித்து பியூஷ் கோயல் சர்ச்சை கருத்து

Vijayakanth
By Fathima Apr 02, 2026 04:47 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது, திமுக, அதிமுக, நாதக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு என்ற அறிக்கையை வெளியிட்டார்.

அதன்பின் பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ,எம்பி கனிமொழி, சபரீசன் ஆகியோர் இணைந்து நடத்தும் குடும்ப ஆட்சியால் ஏற்பட்ட ஊழல் மற்றும் கொள்ளையால் தமிழகத்தின் மதிப்பு உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக பேசினார்.

விஜயகாந்தை விமர்சித்த பியூஷ் கோயல்

தொடர்ந்து பேசுகையில், விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது, அரசியல் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.

விஜயகாந்த் குறித்து பியூஷ் கோயல் சர்ச்சை கருத்து | Piyush Goyal About Vijayakanth

பல திரை நட்சத்திரங்கள் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்கள் நிராகரித்துவிட்டனர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பொதுப்பணிகளில் ஈடுபட்ட பின்னரே அரசியலுக்கு வந்தனர்.

விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது என்பதற்கு கமல்ஹாசன் மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் உதாரணங்களே சாட்சி, கனவு உலகில் வாழ்கிறார் என தெரிவித்தார்.

விஜயகாந்த் குறித்து பியூஷ் கோயல் சர்ச்சை கருத்து | Piyush Goyal About Vijayakanth

எல்.கே.சுதீஷ் கண்டனம்

பியூஷ் கோயலின் இந்த பேச்சுக்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கேப்டன் குறித்து தவறான கருத்தை கூறியுள்ளார், 2014ம் ஆண்டு முதல் நட்புடன் பழகியவர் பியூஷ் கோயல். அவரிடமிருந்து இந்த கருத்துகளை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.