“கல்யாணப் பெண்ணை கண்ணுல காட்டுங்க ப்ளீஸ்” - கதறும் மாப்பிள்ளை

பிஸ்தா pistha
By Petchi Avudaiappan Aug 11, 2021 08:35 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in திரைப்படம்
Report

 நடிகர் சிரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்தா’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் சிரிஷ் அடுத்ததாக ரமேஷ் பாரதி இயக்கத்தில் பிஸ்தா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிகைகள் மிருதுளா, அருந்ததி நாயர் இருவரும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர் செந்தில், யோகி பாபு,சதீஷ், ஞானசம்மந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பிஸ்தா படத்தின் டீசரை இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் நேற்று வெளியிட்டார்கள்.

முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகும் பிஸ்தாவில் மணப்பெண் யாரென்றே தெரியாமல் தெரியாமல் மாப்பிளை ஊர்வலம் நடப்பது போலவும், கல்யாண பேனரில் மணப்பெண் முகத்தின் மீது “coming soon" என சினிமா பாணியில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதன் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் டீசர் இதோ: