பிசாசு-2 படப்பிடிப்பை விரைந்து முடிக்க மிஸ்கின் திட்டம்!
pisasu 2
mysskin
By Thahir
ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகிவரும் பிசாசு -2 திரைப்படத்தை வரும் 18-ம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் மிஷ்கின் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் தற்போது இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் பிசாசு2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதை வரும் 18-ம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் மிஸ்கின் திட்டமிட்டிருக்கிறார். அதன்பின் உடனடியாக இறுதிக்கட்ட பணிகளை தொடங்கவும் அவர் முடிவு எடுத்துள்ளார்.