ரத்தம் படிந்த கால்களுடன் வெளியான ஆண்ட்ரியா... வரவேற்பை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

pisasu2 Pisasu2FirstLook DirectorMysskin andreajeremiah
By Petchi Avudaiappan Aug 03, 2021 05:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த பிசாசு திரைப்படத்தின் 2வது பாகத்தை மிஷ்கின் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் அறிமுக போஸ்டர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ரத்தம் படிந்த கால்களுடன் வெளியான ஆண்ட்ரியா... வரவேற்பை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | Pisasu2 Movie 1St Look Poster Released 

இதனிடையே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் முழுக்க சிவப்பு நிற கொண்ட போஸ்டரில் குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து சிகரெட்டை கையில் வைத்துக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.


இந்த போஸ்டர் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.