மிஷ்கின் ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
Andrea Jeremiah
Pisasu 2
Director Mysskin
By Petchi Avudaiappan
’பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த பிசாசு திரைப்படத்தின் 2வது பாகத்தை மிஷ்கின் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த படத்திற்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.