இந்தியாவில் இன்று நள்ளிரவு வானில் தோன்ற உள்ள ‘பிங்க் மூன்’ - விஞ்ஞானிகள் தகவல் - மக்கள் ஆர்வம்

pink-moon today-night scientists-informed பிங்க் மூன் நள்ளிரவு வானில் தோன்றும் விஞ்ஞானிகள்தகவல்
By Nandhini Apr 16, 2022 09:48 AM GMT
Report

இந்தியாவில் 2022ம் ஆண்டிற்கான "பிங்க் மூன்" என்ற பெருநிலவு இன்று நள்ளிரவு வானில் தோன்றும் என்று நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால், சூரிய ஒளி நிலவில் படுவதை பூமி மறைத்து விடும்.

பூமியின் நிழல் தான், நிலவில் படும். அப்போது, பூமி - நிலவு இடையேயான சராசரி தொலைவானது 3.84 லட்சம் கி.மீ.,யை விட குறைவாக இருக்கும். அப்போது, 'சூப்பர் மூன்' தோன்றும்.

அப்போது நிலவு 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் மின்னும். பூமிக்கு அருகில் நிலவு வருவதால், சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுகிறது.

இதனால், அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டு பிரதிபலிக்கும். அதனால், 'ஆரஞ்சு' முதல் பிங்க் சிவப்பு நிறத்தில் நிலா தெரியும்.

இதை ‘பெரு நிலவு’ என்றும், ‘சூப்பர் மூன்’, ‘பிங்க் மூன்’ என்றும் வானியல் ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள்.    

இந்தியாவில் இன்று நள்ளிரவு வானில் தோன்ற உள்ள ‘பிங்க் மூன்’ - விஞ்ஞானிகள் தகவல் - மக்கள் ஆர்வம் | Pink Moon Today Night Scientists Informed