பெண்களுக்கு இன்று முதல் பிங்க் நிற பேருந்துகள்..!

Government of Tamil Nadu
1 வாரம் முன்

தமிழகத்தில் இன்று முதல் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இன்று முதல் பிங்க் நிற பேருந்துகள் 

தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் (வெள்ளை நிற போர்டு) பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. 

அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பஸ்களில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்துகளின் நிறத்தை 'பிங்க்' நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து துறை மேற்கொண்டது.

பெண்களுக்கு இன்று முதல் பிங்க் நிற பேருந்துகள்..! | Pink Buses For Women From Today

அந்த வகையில் வெள்ளை நிற போர்டு பேருந்துகளின் முகப்பு பகுதியில் பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண் பயணிகள் எளிதாக கண்டறிந்து தங்கள் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிங்க்' நிற பேருந்துகள் இயக்கத்தை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும் அவர், ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கத்தையும் கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.