தமிழக பிங்க் ஆட்டோ திட்டம் ..இன்றுதான் கடைசி நாள் - உடனே பெண்களே விண்ணப்பியுங்கள்..!
சென்னையில் வசிக்கும் பெண்களுக்கென 'பிங்க் ஆட்டோ' எனும் திட்டத்திற்கு வரும் நவ.-23 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது.
பிங்க் ஆட்டோ
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ‘பிங்க் ஆட்டோ’ சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு தகுதியான 250 பெண்களுக்கு மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,தமிழக அரசு பெண்களின் நலன், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் விடியல் பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள்,
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு புதிய மகளிர் நலத் திட்டங்கள் உள்ளன.
அதேபோல், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ‘பிங்க் ஆட்டோக்களை’ அறிமுகப்படுத்துவதன் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க 250 ஆட்டோக்கள் சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன”, என அந்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேவையான தகுதிகள் :
- பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
- சென்னையில் குடியிருக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி :
இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் வரும் நவம்பர்-23ம் தேதிக்குள் கீழ் கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் வேண்டும் என கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.n