பினராயி விஜயனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவருக்கும் கொரோனா தொற்று
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் 3ம் தேதிதான் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
ஆனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால், முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான உம்மன் சாண்டிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் உம்மன் சாண்டி, கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தாகவும் அவருக்கு நடத்தபட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது உம்மன் சாண்டி, கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.