ராகுல் காந்தியின் அணுகுமுறை குறித்து பினராயி விஜயன் - அதிரடி விமர்சனம்
ராகுல் காந்தியின் அணுகுமுறை பாஜகவை வலுப்படுத்துவதாக கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய தனது உரையின் ஆடியோ பதிவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில், கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் மீது முன்வைக்கும் அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தாலும் அவரைக் கட்டிப்பிடிக்க முடியாது என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பினராயி விஜயன், ராகுல் காந்தியின் அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பாஜகக்கு சாதகமாக அமைந்து வருவதாக விமர்சித்தார்.
அத்துடன், ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாட்டின் பின்னணியில் திமுக தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது மக்களுக்கு தெளிவாகப் புரிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.