ஓணம் திருநாள் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து
இன்று ஓணம் திருநாளையொட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
ஓணம் பண்டிகை
கேரள மக்கள் எந்தவிதமான மத பாகுபாடின்றி கொண்டாடும் பண்டிகையில் 'ஓணம் பண்டிகை' மிக முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், வாமனராக வந்த மகாவிஷ்ணு, மகாபாலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டு அவரது ஆணவத்தை அடக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே இந்த ஓணம் பண்டிகை பார்க்கப்படுகிறது.
இன்று கேரள மக்கள் ‘ஓணம் பண்டிகை’யை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தங்களுடைய வீட்டு வாசலில் மலர்களால் கோலங்கள் இட்டும், அழகிய பட்டுடைகள் உடுத்தி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து
இந்நிலையில், ஓணம் பண்டிகைக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஓணம் என்பது பாகுபாடுகளைக் கடந்து மனித மனங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும்.
செழிப்பு, வளம், அமைதி போன்ற கனவுகளை நிறைவேற்றும் பண்டிகை ஓணம் பண்டிகையாகும். ஓணத்தை ஒட்டி மக்கள் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.