கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா!
இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 1 லட்சத்துத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 685 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகள் அரசு விதித்துள்ளது. இதனால் இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சினிமாத்துறை நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் கொரோனா தொற்றில் சிக்கி வருகின்றனர். இன்று காலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அவரது மகளுக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு மருத்துவமனையில் பினராயி விஜயன் உடனடியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடல்நிலையில் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.