நடுவானில் விமானத்தை மாற்ற முயன்ற விமானிகள் - கடைசியில் நிகழ்ந்த விபரீதம்
அமெரிக்காவில் 12 ஆயிரம் அடி உயரத்தில் விமானங்களை மாற்றிக்கொள்ள விமானிகள் முயற்சி செய்த சாகசம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த லூக் அய்கின்ஸ் மற்றும் ஆண்டி ஃபாரிங்டன் என்ற இரு விமானிகள் இதுவரை யாரும் முயற்சித்துப் பார்க்காத ஒரு சாகச முயற்சியை மேற்கொண்டனர். அதன்படி நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும்போதே இருவரும் தங்கள் விமானங்களை விட்டு வெளியேறி மற்றவர் விமானம் கீழே விழும் முன்பு அதில் ஏறி பறக்கவைக்கும் சாகச முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடக்கத்தில் சரியாக தொடங்கிய இந்த முயற்சியில் அடுத்த சில நிமிடங்களில் லூக்கின் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. இதனால் லூக்கின் விமானத்திற்கு செல்லவேண்டிய ஆண்டி விமானத்தை பறக்கவிடுவதற்கான தனது திட்டங்களை கைவிட்டு தரையில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் இறங்கினார்.
அதேசமயம் லூக் ஆண்டியின் விமானத்தில் ஏறி விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுத்து பறக்க வைத்தார்.