நடுவானில் பைலட் மயக்கம் - விமானத்தை ஓட்டிய பயணி பத்திரமாக தரையிறக்கினார்..!

United States of America
By Thahir May 13, 2022 01:36 AM GMT
Report

நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமான பயணி மயங்கி விழுந்ததால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்காவில், அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாவில் இருந்து இரண்டு பயணியருடன் சிறிய ரக விமானம், அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்றது.

நடுவானில் பைலட் மயக்கம் - விமானத்தை ஓட்டிய பயணி பத்திரமாக தரையிறக்கினார்..! | Pilot Fainting The Passenger Who Flew The Plane

நடுவானில் சென்று கொண்டிருந்த போது, பைலட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். இதைப் பார்த்த ஒரு பயணி, விமானி அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு பேசி விபரத்தை கூறினார்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசியவர், அந்தப் பயணிக்கு விமானத்தை இயக்கும் வழிமுறைகளை கூறி, அவரை வைத்தே இயக்கினார். அந்தப் பயணியும், எந்தப் பயமும் இன்றி, கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் அறிவுரைப்படி இயக்கி, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

அந்தப் பயணியையும், கட்டுப்பாட்டு அறை அதிகாரியையும் அனைவரும் பாராட்டினர்.அந்தப் பயணி, புளோரிடாவில் வசிக்கும் தன் கர்ப்பிணி மனைவியை பார்க்க, இந்த சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளார்.