பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற பழைய மாடல் கார் கண்காட்சி - பார்வையாளர்கள் மகிழ்ச்சி
மும்பை, பெங்களூரில் இருந்து தென் தமிழகத்திற்கு பழைய கார்களில் சுற்றுலா வந்த கார் உரிமையாளர்கள் பிள்ளையார்பட்டியில் நடைபெற்ற பழைய மாடல் கார்களின் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில், லட்சுமணன் என்பவர் பழமையை மறக்காமலும், நினைவுபடுத்தும் விதமாகவும்
இந்தியாவில் 1920 களிலிருந்து உபயோகிக்கப்பட்ட பழமையான கார்கள் மற்றும் செட்டிநாடு பகுதிகளில் இருந்த பழைய கலைப் பொருள்களுக்கான கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தார்.
மும்பை, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1947 முதல்- 61 வரை பயன்படுத்திய பழமையான கார்களில் அதன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
1947 பிபிக் 8, ரக கார் டயாம்ளர், வி.டபிள்யு பிகே, பேக்கார்டு, பென்ஸ் உள்ளிட்ட ரகங்களும், 1950 ஆண்டு மோரிஸ் மைனர்,1951 மாடால் எம்.ஜி,
1956ல் பயன்படுத்திய மிவிசென்ட், 1957 மாடல் இம்பாலா, பென்ஸ் 500, 1961 மாடல் வில்லீஸ் வேகன்,
வி.டபிள்யு வான் உள்ளிட்ட 14 பழமையான கார்களில் மும்பையில் இருந்து அதன் உரிமையாளர்கள் பிள்ளையார்பட்டி வந்திருந்தனர்.
இதேபோன்று பெங்களூரிலிருந்து மிகப் பழமையான காரான டயாம்லரில் அதன் உரிமையாளர் வந்திருந்தார்.
பிள்ளையார்பட்டி லட்சுமணன் தனது கண்காட்சியில் உள்ள கார்களையும் அவர் சேகரித்து வைத்திருந்த கிராமபோன்,
கேமராக்கள், ரேடியோ, போன்ற பழைய பொருள்களை பார்வையிட்டு ரசித்தனர். அதன் பின்பு 14 பழமையான கார்களில் வந்திருந்தவர்கள் தங்களது குடும்பத்துடன் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர்.